இன்றைய சிந்தனை

52.ஏகன் அனேகன் இருள்கரும மாயையிரண் டாகவிவை யாறாதி யில். ஏகன் - ஒருவனாகிய முதல்வன், அனேகன் பலவாகிய உயிர்கள், இருள் - அறிவை மறைத்து நிற்கும் மூலமலம், கருமம் - இன்பத் துன்பங்களுக்கு காரணமாகிய கன்மம் ,மாயை இரண்டும் - சுத்தமாயை அசுத்தமாயை என்னும் இருமாயைகள் ஆக - அவை ஆறு பொருள்களும் ஆதி இல் - தொடக்கம் இல்லை. இவை ஆறும் அனாதி என்பது கருத்து. ஆறு என்பது ஆறனுக்கும் எனப் பொருள்படும். நான்கன் உருபுசாரியை முற்றும்மை விகாரத்தால் தொக்கன. இந்த ஆறு பொருளினுடைய உண்மையும் உணர்ந்தார்க்கே சிவாஞனம் விளங்கும் என்றபடி பிறசமயத்தவர் இப்பொருள்களுள் ஒன்றையோ, பலவற்றையோ கொள்ளாது பிழைப்படுவர்.   When the Lord appears as a Guru, what will He teach? The One (the Lord), the many (souls), darkness (ANava), karma and twofold mAyA (suddha and asuddha) - these have no beginning.  
Bookmark the permalink.